45 நாளில் கொரோனா மருத்துவமனை : ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் தந்து கௌரவம்
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்களிப்புடன், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கொரோனா மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து நவீன தொழில்நுட்பத்துடன் கடந்த மே 18ஆம் தேதி மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டுமான பணி தொடங்கியது.
போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று 45 நாட்களில் பிரம்மாண்டமாக கொரோனா மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. இந்த பணிகளில் ஈடுபட்டவர்களை பாராட்டி கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழஙகும் நிகழச்சி, பெருந்துறையில் இன்று பெற்றது.
இந்நிகழ்ச்சின் மூலம் குறுகிய காலத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக படுக்கை வசதிகளுடன் கொண்ட மருத்துவமனை உருவாக்கியதற்காக, உலக அளவிலான எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
மேலும் ஆசிய அளவில் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சகாதேவன் கூறுகையில், தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்தகைய சூழலில் இந்த மருத்துவமனையில் மக்களுக்கு பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று பரவல் என்பது முழுவதும் அளிந்தவுடன் இம்மருத்துவமனையை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அனைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றப்படும் என தெரிவித்தார்.