நசியனூரில் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
நசியனூர் அருகே உள்ள புதுவலசை பகுதியில் 18 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.;
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள புதுவலசை பகுதியில் சுமார் 18 லட்சம் மதிப்பிலான குளம் தூர்வாரும் பணிகளை புதுப்பிக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூமி பூஜை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தமிழக கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர் வில்லரசம்பட்டி முருகேஷ், மாவட்ட பொருளாளர் பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.