அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது
பெருந்துறையில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
பெருந்துறையில், அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சந்தைப்பேட்டையில், கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தாக, இருவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்து, மொத்தம் 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.