கொரோனா மருத்துவமனை: 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு உலக சாதனை

கொரோனா மருத்துவமனை 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு உலக சாதனை: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.;

Update: 2021-08-06 13:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் வரத்தொடங்கின. இதனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதி இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களில் 401 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.


நவீன தொழில்நுட்பத்துடன் நடைபெற்று வந்த இந்த கட்டிட பணிகள் 45 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாறு குறுகிய காலத்தில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டியதற்காக உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசிய கண்ட அளவிலே ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனை விருதுகளை வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனையை பொதுமககளின் பயன்பாட்டிற்காக வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் இண்டர்நேஷனல் தலைவர் ஷிகர் தேத்தா கலந்து கொண்டு அரசு ஈரோடு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் டீன் மருத்துவர் மணியிடம் இன்று ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ஹெல்த் கேர் டிரஸ்ட் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News