அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
பெருந்துறை அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் மூன்று பேர் படுகாயம்;
சேலத்தில் இருந்து 35 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சோளிபாளையம் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
எனினும் விபத்தில் படுகாயமடைந்திருந்த பஸ் டிரைவர் செந்தில் குமார், கன்டெக்டர் கதிரேசன் மற்றும் பயணி ஒருவர் என மூன்று பேரையும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மற்ற பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பினர். இதனையடுத்து ஜேசிபி வண்டி வரவழைத்து பஸ்ஸை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.