உலக சுற்றுச்சூழல் தினம்: ஈரோட்டில் 21ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கிவைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்- கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 21,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

Update: 2021-06-05 16:16 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருந்துறை சிப்காட் வளாகத்தில், 21000, மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். 

உலகெங்கும் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் தாக்கத்தை அனைவரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. பருவநிலை மாற்றத்தால் கடும் பாதிப்புகள் இருப்பதை, ஆய்வுகல் தெரிவித்துள்ளன.

எனவே, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பசுமைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

அவ்வகையில், இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்- கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில்,  4.08 ஏக்கர் பரப்பில் 21,000 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், சிப்காட் தலைவர் மகாலிங்கம், சிப்காட் உதவி பொறியாளர் சுஜா பிரியதர்ஷினி, தொழிற்சாலையின் பொதுமேலாளர் சேகர், உற்பத்தி தலைவர் புனிதவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News