பாலியல் தொல்லை புகாரை கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-22 11:00 GMT

போராட்டக்களத்தில் பள்ளி மாணவிகள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் நேற்று முன் தினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்த போலீசார், ஆசியர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். இதில் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணவிகள் மற்றும் பெற்றோர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News