பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் விசிட்: ஈரோடு கலெக்டர் அதிரடி

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில், பாதுகாப்பு கவச உடை அணிந்து, கலெக்டர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-17 14:10 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மேற்கொள்ளப்படும் கொரோனா சிகிச்சை முறைகள் குறித்து,  புதிதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கொரோனா பரிசோதனை மையம் , புதிதாக 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளையும் பார்வையிட்டர்.

இதனை தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து (பிபிஇ கிட்) கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை, உறவினர்கள் நேரடியாக கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தகவல் மையத்திலோ அல்லது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரிடம் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News