ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் ஆக்ஸிஐன் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டார்.;

Update: 2021-05-30 06:21 GMT

தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரானாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 610 ஆக்ஸிஐன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் நிரம்பிய நிலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஐன் வசதிகளுடன் கூடிய 300 படுக்கை வசதிகளை பார்வையிட்டார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து 5 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு புதியதாக பணி நியமன ஆணையை வழங்கினார். ரோட்டரி சங்கத்தின் சார்பில் 14 கோடி மதிப்பீட்டில் 402 ஆக்ஸிஐன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளோடு கட்டப்பட உள்ள கட்டிடத்தின் வரைப்படத்தை பார்வையிட்டார். முன்னதாக திமுக சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு அரசி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கதிரவன் உட்பட ஏராளமான அதிகாரிகள் உடனிருந்தனர்.



Tags:    

Similar News