ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தோப்பு வெங்கடாசலம் இருந்து வருகிறார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தற்போது பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரான தோப்பு வெங்கடாசலத்திற்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக, ஜெயக்குமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டவர்கள் பெருந்துறை அண்ணாசாலையில் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட அறிவித்துள்ள வேட்பாளரை மாற்ற வேண்டும், தோப்பு வெங்கடாசலத்தை வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.