ஈரோடு : 7 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட 7 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-24 01:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுவரை, மாவட்டத்தில் 9.50லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், 2 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தற்போது, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட அல்லது தாலுகா தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரம் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையி னர் கூறியதாவது: பெருந்துறையில் உள்ள அரசு மருத் துவ கல்லுாரி மருத்துவம னையில் நேற்று தனியாக தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு, 2 ஸ்டாப் நர்ஸ்கள், 4 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கு முதல் மற்றும் இரண் டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று 3,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. தினமும், 1,000 பேருக்கு தடுப்பூசி போடவாய்ப்புள்ளது. அதேபோல, ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி என 6 தாலுகாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையிலும் தடுப்பூசி மையம் அமைத்து 2 நர்ஸ், இரு டேட்டா என்ட்ரி ஆப் ரேட்டர் நியமிக்கப்பட்டு சராசரியாக 500 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வருகை மற்றும் மருந்து வருகைக்கு ஏற்ப, எண்ணிக்கை உயர்த்தப்படும். தாளவாடி மலைப்பகுதியாக உள்ளதால் அங்கு பகலில் மட்டும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினர்.

Tags:    

Similar News