தேமுதிக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
தேமுதிக அமமுக கூட்டணி சார்பில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் குழந்தைவேல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.;
தேமுதிக அமமுக கூட்டணி சார்பில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் குழந்தைவேல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தேமுதிக அமமுக கூட்டணியின் பெருந்துறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக அமமுக கூட்டணி பெருந்துறை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.குழந்தைவேல் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து தனது ஆதரவாளர்களிடையே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு ஊர்வலமாக சென்று பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இலாஹிஜானிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து பிரச்சனைகளையும் தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன்,உயர்மட்ட குழு உறுப்பினர் கோபால்,மாவட்ட நிர்வாகி பாபு, ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் சண்முகம், திருப்பூர் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஆனந்த், பெருந்துறை ஒன்றியம் ராஜேந்திரன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி,ஈரோடு மாநகர, மாவட்ட செயலாளர் ஆனந்த், அமமுக மாவட்ட செயலாளர் சக்தி சுப்ரமணியம், அமமுக மாவட்ட வர்த்தக அணி வெங்கடேஷ், அமமுக மாநில நெசவாளரணி செயலாளர் தரணி சண்முகம் உட்பட தேமுதிக மற்றும் அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.