பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம்: அரசு நிர்ணயம்

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க அரசாணை வெளியிட்டதை அடுத்து மாணவ மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-20 17:39 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனயடுத்து அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்ட நிலையிலும் பழைய கல்விக்கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரத்து 110 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள் அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 13 ஆயிரத்து 610 ரூபாயை கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் தங்களது கோரிக்கை நிறைவேறாததால் கடந்த 16 நாட்களாக தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். இந்நிலையில்மாணவ மாணவிகளின் தொடர் போராட்டத்தினையடுத்து தமிழக அரசு தற்போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 610 ரூபாய் என நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது . இதனால் மகிழ்ச்சியுற்ற மாணவ மாணவிகள் கல்லூரியின் முன்பு கூடி பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர்.

Tags:    

Similar News