தேமுதிக சமத்துவ பொங்கல் விழா

ஈரோடு கிராமத்தில் தேமுதிக வினரால் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது;

Update: 2021-01-15 17:55 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாண்கவுண்டம்பாளையம் பகுதியில் தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருந்துறை ஒன்றிய தேமுதிக செயலாளர் எஸ்.வெங்கடாசலபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தேமுதிக கழக செயலாளர் கே.முருகன் கலந்து கொண்டார். முன்னதாக பசுவ பெருமாள் கோவிலில் கேப்டன் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News