வேன் கம்பத்தில் மோதிய விபத்து – மின் வினியோகத்தில் தடை
சிந்தன் நகரில் மின் கம்பத்தை மோதிய வேன் – மின்சாரம் 3 மணி நேரம் துண்டிப்பு;
கம்பத்தில் மோதிய வேன்; மின் வினியோகத்தில் தடை
ஈரோடு, கிருஷ்ணம் பாளையம், சிந்தன் நகர் பகுதியில் நேற்று மாலை 6:50 மணியளவில் ஒரு ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று மின் கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் வேனின் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. விபத்தில் சிக்கிய வாகன ஓட்டுநரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு உதவினர். இந்த விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இரவு 7:00 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு 10:15 மணியைக் கடந்தும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படாததால், சிந்தன் நகரின் நான்கு வீதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.