ஈரோட்டில் ஓடும் காரில் தீ
ஈரோட்டில் ஓடும் காரில் தீ பற்றியதால் உயிர் தப்பிய பேன்சி கடை உரிமையாளர்;
காரில் தீ விபத்து, கடைக்காரர் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!
ஈரோடு சூளை பகுதியில் பேன்சி கடை வைத்திருக்கும் சிவக்குமார் (45) கிவிட் காரில் சூளையில் இருந்து வீரப்பன்சத்திரம் நோக்கி நேற்றிரவு 9:00 மணியளவில் பயணித்தார். ஒரு வளைவில் காரைத் திருப்பியபோது பேனட் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட சிவக்குமார் உடனடியாக காரை நிறுத்தி இறங்கினார். அதே நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது.
இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து குடம், பக்கெட்டுகளில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் காரின் பேனட் பகுதி மட்டுமே எரிந்தது.