தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஓடத்துறை குளம்

தொடர் மழையின் காரணமாக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓடத்துறை குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-11-09 10:15 GMT

நிரம்பி வழியும் ஓடத்துறை குளம்.

கோபிசெட்டிபாளையம் சுற்றவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறுது. இந்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள், வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று அமைந்துள்ளது.

இதன் மூலம், சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நன்செய் சாகுபடி செய்கின்றனர். அதுமட்டுமின்றி சூரியம்பாளையம், பாலப்பாளையம், அய்யம்பாளையம், ஓடத்துறை உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த இரண்டு லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக இந்த குளம் விளங்குகிறது.

சில நாட்களாக, கோபிசெட்டிபாளையம் சுற்றவட்டார பகுதிகளில் மழை காரணமாக கசிவுநீர் மற்றும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒடத்துறை குளம் நிரம்பியுள்ளது. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும், வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுபாட்டை தடுக்க இந்த தண்ணீர் போதுமாதாக இருக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News