ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில் நகை கண்காட்சி

திருச்செங்கோட்டில், மணமகள்களுக்கான ஸ்பெஷல் கலெக்ஷனுடன் புது டிசைன்கள்;

Update: 2025-03-22 09:00 GMT

திருச்செங்கோட்டில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் பிரம்மாண்ட ஆபரண கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு ஹோட்டல் ராதா பிரசாதில் நேற்று சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையை சுரேஸ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஸ்பாபு, கவுன்சிலர் மைதிலி ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில், திருமண நகைகளுக்கான பல்வேறு வகையான பாம்பே ஆரம், கல்கத்தா ஆரம், துபாய் ஆரம், கேரளா ஆரம், ட்ரெடிஷனல் ஆரம், முகப்பு செயின், வளையல்கள், டயமண்ட் நகைகள் மற்றும் ஹால்மார்க் வெள்ளியில் உருவாக்கப்பட்ட திருமண சீர்வரிசை செட்கள் என பல்வேறு வகை கலெக்ஷன்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, பூஜை பொருட்களுக்கெனவும் தனித்துவமான கலெக்ஷன்கள் பரிமாறப்பட்டுள்ளன. புதுமையான டிசைன்களில், உயர்தர ஆபரணங்களை மாநகரில் வேறு எங்கும் காண முடியாத வகையில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News