நீரின்றி தவிக்கும் பாரதிநகர், மறியலில் இறங்கிய வெள்ளித்திருப்பூர் மக்கள்

20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாலை மறியலில் இறங்கியதாள், போக்குவரத்து பாதிப்பு;

Update: 2025-03-21 05:08 GMT

வெள்ளித்திருப்பூரில் குடிநீர் பிரச்சினை – மக்கள் சாலை மறியல்

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் பேரூராட்சியின் ஒன்பதாவது வார்டு பாரதிநகரில் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஆற்று நீர் மற்றும் போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக விநியோகம் முறையாக நடைபெறவில்லை. இந்த பிரச்சினையை நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீரற்ற அவஸ்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேற்று வெள்ளித்திருப்பூர் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மக்கள் மறியலை முடித்து கலைந்தனர். இந்த எதிர்ப்பினால் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Tags:    

Similar News