விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த இளைஞரை அமைச்சர் முத்துசாமி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.;
மொடக்குறிச்சியை சேர்ந்த யுவராஜ் என்பவர் வியாபாரம் சம்பந்தமாக ஈரோடு வந்து விட்டு மொடக்குறிச்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளி அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது வேகதடையில் நிலை தடுமாறி விழுந்ததால் தலையில் அடிபட்டும், காயங்கள் ஏற்பட்டு கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமிழக நகர்புற மற்றும் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.