கொங்கு கலை கல்லுாரி 31வது ஆண்டு விழா

கொங்கு கலை கல்லுாரி 31வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கவிதாசன்;

Update: 2025-03-10 05:00 GMT

காங்கணம் நஞ்சனாபுரத்தில் அமைந்துள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 31வது ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது, இந்நிகழ்வில் பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி அறக்கட்டளை தலைவர் திரு. குமாரசுவாமி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார், கல்லூரி முதல்வர் திரு. வாசுதேவன் அவர்கள் கல்லூரியின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அடங்கிய விரிவான ஆண்டறிக்கையை சபையோர் முன் வாசித்தார், விழாவில் கல்லூரி தாளாளர் திரு. தங்கவேல், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் திரு. இளங்கோ, கொங்கு மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு. தேவராஜா மற்றும் அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் திரு. சச்சிதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை ரூட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனரும் சிந்தனை கவிஞருமான திரு. கவிதாசன் அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை நிகழ்த்தினார், இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் நூல் வெளியிட்ட ஆசிரியர்கள், கல்வி கற்பித்தலில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சாதனையாளர்களான சிறந்த மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன, விழா ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான திரு. குமரகுரு அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி வரவேற்புரை நிகழ்த்தினார், கல்லூரியின் 31 ஆண்டுகால வளர்ச்சிப் பாதையில் அடைந்த சாதனைகளையும், மாணவர்களின் எதிர்காலத்திற்கான புதிய முன்னெடுப்புகளையும் இவ்விழாவில் கொண்டாடிய கல்லூரி நிர்வாகம், வரும் ஆண்டுகளிலும் கல்விச் சிறப்புடன் தொடர்ந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது.

Tags:    

Similar News