ஜன., 21ம் தேதி கள் இறக்கி சந்தைபடுத்தப்படும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

தமிழகத்தில் ஜன., 21ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி தெரிவித்தார்.;

Update: 2022-01-17 10:15 GMT
ஜன., 21ம் தேதி கள் இறக்கி சந்தைபடுத்தப்படும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கள் நல்லுசாமி.
  • whatsapp icon

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி விற்கப்படும். தீர்ப்பில் உள்ள தவறின் காரணமாகத்தான் மேகதாதுவில் அணை கட்ட எண்ணம் வந்துள்ளது. மாதந்தோறும் என்ற  அடிப்படையில் நீர் பங்கீடு என்பதை தவிர்த்து தினந்தோறும் நீர் பங்கீடு என்பதை கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் போல கொண்டு வர வேண்டும் என்றார். வரும் 21ம் தேதி நடைபெறும் கள் இறக்குவதற்கு பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News