ஆசனூரில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்; குற்றங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை

Today erode news in tamil- சத்தியமங்கலம் சப் -டிவிஷன் ஆசனூரில் குற்றங்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக்கிய இடங்களில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

Update: 2023-09-08 09:11 GMT

Today erode news in tamil- ஆசனூரில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. (கோப்பு படம்)

Today erode news in tamil- இன்றைய சூழலில், குற்றங்களை தடுப்பதில், குற்ற நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில், குற்றவாளிகளை கண்டறிவதில் ‘மூன்றாவது கண்’ என, கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் உள்ளன. பிரதான ரோடுகள், சிக்னல் பகுதிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் என பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், பல குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, போலீசாருக்கு மிகவும் உதவுகிறது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும், கண்காணிப்பு கேமராக்களுக்கு பயந்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கவும், இது வழிவகுத்து வருகிறது. 

எனினும் முக்கிய நகரங்களில் அதிகரித்துவரும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் அதிக எண்ணிக்கையில், சிசிடிவி கேமராக்களை, பொருத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆசனூரில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில், குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் சப்- டிவிஷனில் உள்ள ஆசனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காக முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டு அறை ஆசனூர் போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆசனூர் காபி டே பேக்கரி முன்பு 4 கேமராக்களும், போலீஸ் ஸ்டேஷன் முன்பு 2 கேமராக்களும், அரேப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையம் முன்பு 2 கேமராக்களும், திம்பம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 4 கேமராக்கள் என மொத்தம் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து ஆசனூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த இதற்கான துவக்க நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. அய்மன் ஜமால் சி.சி.டி.வி. கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, குற்றங்கள் உடனடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அப்போது தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News