குடிநீர் கேட்டு போராடிய பெண்கள்

நம்பியூரில், குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் கையில் குடத்துடன் போராட்டத்தில் ஈடுயப்பட்டனர்;

Update: 2025-03-26 07:10 GMT

நம்பியூர்: நம்பியூர் பேரூராட்சியின் ஐந்தாவது வார்டு உட்பட்ட ரங்கநாதபுரத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் நடைபெறும் மின் மோட்டார் பழுதடைந்த நிலையில், பல நாட்களாக குடிநீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையாக இருந்த பெண்கள், நேற்று அதிகாலை காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து போராடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் மீட்டமைக்க அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அமைதியாக வீடுகளுக்கு திரும்பினர். சம்பவம் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News