ஆண்கள் மட்டுமே பங்கேற்றகும் பாரம்பரிய குண்டம் விழா

கோபியில், கரியகாளியம்மன் கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தீமிதிப்பு விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தனர்;

Update: 2025-03-28 05:00 GMT

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பாரம்பரிய குண்டம் விழா கோலாகலம்

கோபி தாலுகாவின் தடப்பள்ளி கிராமம், காசிபாளையத்தில் அமைந்துள்ள கரியகாளியம்மன் கோவில், அதன் பாரம்பரிய குண்டம் விழாவுக்காக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும், இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று, தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் மரபு இருந்து வருகிறது.

இவ்வாண்டு விழா கடந்த 13ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று அதிகாலை "அம்மை அழைத்தல்" எனப்படும் முக்கிய ஆன்மிக நிகழ்வு நடைபெற்றது. பின்னர், தலைமை பூசாரி வெங்கடேசன், குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் காலை 6:30 மணிக்கு முதன்முதலாக தீமிதித்து விழாவை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து, காசிபாளையம், சிங்கிரிபாளையம், காந்திநகர், மணியக்காரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட ஆண்கள், தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி பக்திப் பரவசத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News