கலெக்டர் தலைமையில், வேளாண் மாணவியருக்கு பயிற்சி

ஈரோட்டில், கலெக்டர் தலைமையில், தனியார் வேளாண் மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது;

Update: 2025-03-29 09:50 GMT

தனியார் வேளாண் மாணவியருக்கு பயிற்சி – கலெக்டர் தலைமையில் கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜே.கே.கே. முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் பாவன திரிஷா, தனுஷ்யா, கோபிகா, கனிஷ்கா, மவுனிகா, ஓம்ஸ்ரீ, பவித்ரா, ரிஸ்வானா, சந்தியா, தாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவியர்களுக்கு வேளாண் துறை செயல்பாடுகள், விவசாயிகளுக்கான சிக்கல்களுக்கு வழங்கப்படும் தீர்வுகள், வேளாண் திட்டங்கள் மற்றும் கூட்ட நடைமுறைகள் பற்றிய விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News