உணவகங்களில் சுகாதார மோசடி

ஈரோடுட்டில், சுமார் 18 கிலோ பழைய இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது;

Update: 2025-04-05 05:40 GMT

ஈரோடு: பிரிட்ஜில் பழைய இறைச்சி வைத்த உணவகங்களுக்கு ரூ.3,000 அபராதம் – உணவகங்களில் சுகாதார மோசடி

ஈரோடு மாநகரத்தில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையிலான குழு பரிசோதனை மேற்கொண்டது. இதில், அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்கிடையில் இரண்டு உணவகங்களில் சமைத்த இறைச்சி வகைகள் பழைய நிலையில் குளிர்பதன பெட்டிகளில் (பிரிட்ஜில்) சேமிக்கப்பட்டிருப்பதும், சுகாதாரமில்லாத முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது. இது  குறித்த இரண்டு கடைகளில் இருந்து சுமார் 18 கிலோ பழைய இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், சமையலறைகள் நல்ல நிலைமையற்ற வகையில் இருந்ததால், இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. விவரங்களை விளக்குமாறு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ் தெரிவித்ததாவது

சில உணவகங்களில் பழைய இறைச்சி, செயற்கை வண்ணங்கள், அஜினோமோட்டா போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தரமற்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதுபோன்ற உணவகங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு குறித்த புகார்களை 94440 42322 என்ற எண்ணிற்கு அல்லது உணவு பாதுகாப்புத் துறை நுகர்வோர் செயலியில் தெரிவிக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News