முன்விரோதம்: பள்ளி மாணவனை கத்தியால் குத்திய முடி திருத்தும் தொழிலாளி

ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு.;

Update: 2022-03-11 07:15 GMT

ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவரது மகன் அன்பரசு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் சீனிவாசன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பள்ளி மாணவன் அன்பரசை குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்த மாணவனை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீசார் மாணவனிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரனையில் இருவருக்கும் பணம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சலூன் கடைக்காரர் சீனிவாசனை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News