மில் தொழிலாளி உயிரிழப்பு

தொழில்நுற்ப கோளாறு காரணமா, அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்;

Update: 2025-03-25 10:20 GMT

மில் தொழிலாளி உயிரிழப்பு  தொழில்நுற்ப கோளாறு காரணமா

காங்கேயம்: தேனி மாவட்டம் புலிமான்கோம்பை சேர்ந்த 24 வயது இளைஞர் சரத்குமார், ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் செயல்படும் ஒரு ஸ்பின்னிங் மிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மில் குடியிருப்பில் தங்கி, அங்கு வேலை செய்து வந்த அவருக்கு நேற்று முன்தினம் பணியின் போது கோரமான விபத்து ஏற்பட்டது.

அன்றைய தினம் மில்லின் புகைபோக்கி இயங்காமல் இருந்ததால், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிருக்கு போராடி, நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் மில் நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமா? சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததா? போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Similar News