வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து: பணிகள் தீவிரம்!

வெள்ளகோவில் அருகே, நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பாலனாது.

Update: 2024-12-27 11:00 GMT

ஈரோடு : காங்கேயம்,வெள்ளகோவில் அருகே, நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பாலனாது.

கதிர்வேல் நடத்தி வரும் நூல் மில்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 51. இவர், சேரன் நகரில் பெரியநாயகி அம்மன் என்ற பெயரில், கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்லை, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 60க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

விபத்து நடந்த நேரம்

நேற்று காலை, 6:30 மணியளவில் மில்லின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள பணியாளர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு பணி

சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் போனதால், காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்களும் சேர்ந்து, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சேதமான பொருட்கள்

இருப்பினும் மிஷின், பஞ்சு என லட்சக்கணக்கில் சேதமாகியுள்ளது.

விபத்துக்கான காரணம்

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

விசாரணை

வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News