ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் காய்ச்சல் - முகாம் நடத்தி கலெக்டர் ஆய்வு

ஈரோடு, 46 புதூர் பகுதியில் பலருக்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில், அங்கு முகாம் நடத்தி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-11-11 11:45 GMT
ஈரோட்டில் மீண்டும் அதிகரிக்கும் காய்ச்சல் - முகாம் நடத்தி கலெக்டர் ஆய்வு

46 புதூர் பகுதியில்,  பலருக்கு காய்ச்சல் பரவியதால், அங்கு மருத்துவ முகாம் நடத்தி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.

  • whatsapp icon

ஈரோடு அடுத்துள்ள 46 புதூர், சக்தி கார்டன் பெரிய செட்டிபாளையத்தில் வசித்து வருபவர்களில் பலருக்கு, காய்ச்சல் பரவியுள்ளது. ஒரு பகுதியில் பலருக்கு பரவியதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில்,  அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இன்று  திடீரென ஆய்வு மேற்கொண்டு, பார்வையிட்டார். இதில்,  குடிநீரில் உள்ள குளோரின் அளவு, மழைநீர் தேக்கம் மற்றும் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை,  தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Tags:    

Similar News