ஈரோடு : பள்ளி மாணவிகளுக்கான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அண்மை காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன;
ஈரோடு : தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அண்மை காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. பள்ளிகள் என்பது மாணவர்களின் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலை வேறுவிதமாக உள்ளது.
மாணவர்களுக்கான இலவச உதவி மையம்
இந்த நிலையில், மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மேலும், ஆலோசனை பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.