மகா சிவராத்திரி வழிபாடு..!
மகா சிவராத்திரி விழாவையொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் அதக அளவில் வரத்தொடங்கினர்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
மகா சிவராத்திரி விழாவையொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் அதக அளவில் வரத்தொடங்கினர். திருத்தொண்டீசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்தனர். டி.வி.எஸ்.வீதி மகிமாலீஸ்வரர் கோயில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோயில், கருங்கல்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயில் என ஈஸ்வரன் கோயில்களில் எல்லாம் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் நள்ளிரவிலும் விழித்திருந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, சிவபெருமான் அருளை பெற்றனர்.