நசியனூரில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்..!
நசியனூரில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு அடுத்த நசியனூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு அடுத்த நசியனூர் நால்ரோடு வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், அப்பகுதியில் அரசுப்பள்ளி இருப்பதால் மாணவர்களின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
மின் கம்பம் ஆபத்தான நிலையில்
இந்நிலையில், அப்பகுதியில் பெருந்துறை செல்லும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. உயர் மின் அழுத்த ஒயர்களை தாங்கி நிற்கும் இந்த சிமெண்ட் மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதன் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும்படி பலவீனமாக உள்ளது.
மின் கம்பம் விழும் அபாயம்
இதனால், இந்த கம்பம் மீது வாகனங்கள் லேசாக உரசினாலோ அல்லது காற்று பலமாக அடித்தாலோ கிழே விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மாற்று வழி கோரும் பொதுமக்கள்
எனவே, சேதமடைந்த இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.