ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம்..!
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் வழங்க வலியுறுத்தல்
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம், ஓய்வு கால பலன் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதிய ஓய்வூதியர்களுக்கு இடைக்கால நிவாரணம்
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்
♦ முன்னாள் மாநில தலைவர் ராமமூர்த்தி
♦ மாநில துணை பொது செயலாளர் குமரவேல்
♦ தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி
♦ தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார்
♦ தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம்
♦ தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் மகாலிங்கம்
இவர்கள் தவிர பல முக்கிய பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.