மாநகராட்சியில் 2024-25 க்கான வரிவசூலில் சாதனை

ஈரோடு மாநகராட்சி, வரி வசூலில் மாநில அளவில் 3ம் இடத்தை பெற்றுள்ளது;

Update: 2025-04-02 09:00 GMT

ஈரோடு மாநகராட்சி – வரி வசூலில் மாநில அளவில் 3ம் இடம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 2024-25 ஆண்டிற்கான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை வரிகள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் உள்ளிட்ட மொத்தமாக 4.27 லட்சம் வரி விதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளுக்கான வருடாந்திர கேட்புத் தொகையாக ரூ.106.87 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை ரூ.87.19 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் 24 மாநகராட்சிகளுள், வரி வசூலில் ஈரோடு மாநகராட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News