ஈரோடு: தங்கமணியின் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-15 04:45 GMT

ஈரோட்டில் உள்ள எம்எல்ஏ தங்கமணியின்  உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக வை சேர்ந்த முன்னாள் மின்சார துறை அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வுமான தங்கமணி மீது வந்த புகாரின் பேரில் அவரது வீடு மற்றும் அலுவலங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் பைப் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சகோதரர்கள் சிவானந்தன் மற்றும் செந்தில் நாதன் ஆகியோரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பண்ணை நகரில் உள்ள சின்னதுரை என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் பாரி நகர், கணபதி நகர் உள்ளிட்ட மாவட்டத்தில் 5 இடங்களில் 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News