247வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது.;
ஈரோடு : ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை
♦ வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 11
♦ வேட்புமனு தாக்கல் கடைசி தேதி: ஜனவரி 17
♦ வேட்புமனுக்கள் பரிசீலனை: ஜனவரி 18
♦ வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஜனவரி 20
♦ வாக்குப்பதிவு: பிப்ரவரி 5
♦ வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
வேட்புமனு தாக்கல்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மட்டும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
முதல் வேட்பாளர்
முதல் நபராக தேர்தல் மன்னன் எனப்படும் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் (64) மனு தாக்கல் செய்தார். தான் இதுவரை 246 தேர்தல்களில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.