ஈரோடு அரசு கல்லூரியில் மாவட்ட அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-11-25 04:15 GMT

பைல் படம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம், ஈரோடு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு ஆகியோர் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் (Job Mela) வருகிற 27.11.2021 (சனிக்கிழமை) ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.

எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இதர விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ள அணுக வேண்டிய முகவரி:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு -638011. தொலைபேசி எண்: 0424 - 2257087/ 9444094277 மின்னஞ்சல் : dpiu_erod@yahoo.com

Tags:    

Similar News