வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புது ஆபத்து : போலீஸ் சொல்வதை கேளுங்க!
தொழில் நுட்பம் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பலிடம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.;
உலகளவில் தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துளது. இது, ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் மோசடி கும்பல்களும் இருக்கின்றனர்.
இந்த மோசடி கும்பல்கள், தொழில் நுட்பத்தில் தங்களை அப்டேட் செய்து கொண்டு தங்களது கைவரிசையை காட்டி வருகிறனர். அந்த வகையில் தற்போது அந்த மோசடி கும்பலின் பார்வை, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த கும்பலிடம் இருந்து பொதுமக்கள் தங்களது பணத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளது. இது குறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு, அவர்களது வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தியை சமூக விரோதிகள் அனுப்புகின்றனர். அந்த குறுஞ்செய்தியில், அவர்களது வங்கி கணக்குடன் பான் கார்டு எண் போன்ற விவரங்கள் இணைக்க வேண்டும் என கூறி, லிங்கை அனுப்பி, அதன் மூலம் ஆன் லைனில் அப்டேட் செய்ய கூறுகின்றனர்.
அந்த குறுஞ்செய்தியை பார்ப்பவர்கள், வங்கியில் இருந்து அனுப்பப்பட்டது என நினைத்து, அந்த லிங்கினுள் நுழையும் போது, அது வங்கியின் இணையதளம் போன்று போலியாக உருவாக்கப்பட்ட இணையதளம் திறக்கிறது. அதில் அவர்களின் வங்கி கணக்கு எண், ஏடிஎம் காரடு நம்பர், ஓ.டி.பி போன்ற விவரங்கள் பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது.
அதனை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தவுடன் மோசடி கும்பல் அவர்களது வங்கி கணக்கை ஹேக்கிங் செய்து பணம் கொள்ளையடித்து விடுகின்றனர். எந்த வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டு சேர்க்க வேண்டும் அல்லது கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் என மெசேஜ் மூலமாக லிங்க் எதுவும் அனுப்பாது. எனவே, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், இது போன்ற மோசடி மெசேஜ்களை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, அதில் தெரிவித்து