சென்னிமலையில் சுங்கம் வசூல் ஏலம் இரு மடங்கு அதிகரிப்பு
சென்னிமலை பேரூராட்சியில் வாரச் சந்தையில் சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட வகைகளுக்கு செவ்வாய்கிழமை ஏலம் நடைபெற்றது.இதில் கடந்த முறையை விட இரு மடங்கு ஏலம் போனது.;
ஈரோடு : சென்னிமலை பேரூராட்சியில் வாரச் சந்தையில் சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட வகைகளுக்கு செவ்வாய்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த முறையை விட இரு மடங்கு ஏலம் போனது.
சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் இதற்கான ஏலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் ஸ்ரீதேவி அசோக் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலா் க. மகேந்திரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 12 போ் கலந்து கொண்டனா்.
வாரச் சந்தையில் சுங்க வசூல் உரிமை
வாரச் சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமை கடந்த முறை ரூ.4.76 லட்சத்துக்கு விற்பனையானது. தற்போது நடைபெற்ற ஏலத்தில் ரூ.8.28 லட்சத்துக்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.
பேரூராட்சி எல்லைக்குள் உள்ள வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிப்பு
பேரூராட்சி எல்லைக்குள் உள்ள பகுதிகளில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமை ரூ.4 லட்சத்து 25, 500-க்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டு ரூ.2.39 லட்சத்துக்கு விற்பனையானது.
சென்னிமலையில் அமைந்துள்ள தியாகி குமரன் தினசரி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் உரிமை ரூ.2 லட்சத்து 81,500-க்கு ஏலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த உரிமை ரூ.99,360-க்கு மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.