கொடுமுடியில் பெண் கவுன்சிலர் மாயம், போலீசார் தீவிர விசாரணை
திடீர் மாயமான பெண் கவுன்சிலர், அரசியல் காரணமா? குடும்ப பிரச்சனையா, போலீசார் தீவிர விசாரணை;
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி தனபாலின் மனைவி ரேவதி (44) கொடுமுடி பேரூராட்சியின் ஏழாவது வார்டு (காங்கிரஸ்) கவுன்சிலராக செயல்படுகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 19ம் தேதி, தனபால் தனது தந்தையின் நினைவஞ்சலியை முன்னிட்டு, கொடுமுடியில் திதி கொடுத்து வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் அவரது தாய் மற்றும் இரு மகள்கள் மட்டுமே இருந்தனர். மனைவி ரேவதி காணாமல் போனதை பார்த்து, தனபால் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையில், பேரூராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. ரேவதி மாயமானது இதோடு சம்பந்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், ரேவதி தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவர் நேருக்கு நேர் வருவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.