ஒரே இரவில் 6 வீடுகளில் திருட்டு
காங்கேயத்தில் 6 வீடுகளில் செம்பு பாத்திரங்கள், ரொக்கம், மொபட் திருட்டு கிராம மக்கள் அதிர்ச்சி;
ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர்ச்சியான திருட்டு கிராம மக்கள் அச்சம்
காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் ஊராட்சியில், நேற்று முன்தினம் இரவு நஞ்சப்பகவுண்டன் வலசு, துரைசாமி, தாத்திக்காடு அப்புக்குட்டி, முத்துச்சாமி, சாமியாத்தாள், சுப்பு ஆகிய ஆறு பேரின் வீடுகளில் ஒரே இரவில் தொடர் திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. மர்மநபர்கள் வீட்டில் புகுந்து, செம்பு பாத்திரங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்ட மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் மொபட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவத்திற்கான தகவல் கிடைத்தவுடன், காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான திருட்டால், சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்