ஈரோட்டில் நுகர்வோர் உரிமை மீறலுக்கு எதிராக கண்காணிப்பு தீவிரம்
தரமற்ற பொருட்களுக்கு தடை என நுகர்வோர் பாதுகாப்பு குழுவிர் தீவிர நடவடிக்கை;
ஈரோட்டில் நுகர்வோர் அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம்
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர், முத்திரை ஆய்வர், உதவி ஆய்வர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எடையளவுக்கு முறைபடியான முத்திரையின்றி மின்னணு தராசுகள் பயன்படுத்தப்படுவதை கண்டித்தனர். மேலும், பொட்டல பொருட்கள் அதிகப்பட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது, தேவையான அறிவிப்புகள் இன்றி பொருட்கள் விற்கப்படுவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.