அந்தியூரில் சமுதாய வளைகாப்பு விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்பு
அந்தியூர் மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி விழாவில் 47 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு;
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். விழாவில் 75 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, அந்தியூர் வார சந்தையில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவருந்தும் கூடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
பின்னர், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற உயர் கல்வி கருத்தரங்கிலும் இரு அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மக்களவை உறுப்பினர் பிரகாஷ், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குருசாமி, வட்டாட்சியர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.