நோய் தாக்குதலால் தேங்காய் விலை உயர்வு
நோய் தாக்குதலால் தேங்காய் விலைகளில் உயர்வு , கிலோ ரூ.170க்கு மேல் விற்பனை;
ஈரோடு: கடுமையான வெயில் மற்றும் நோய் தாக்குதலின் காரணமாக, தோட்டக்கலை துறையின் நடவடிக்கைகள் இல்லாததால், கொப்பரை தேங்காயின் விலை கிலோ ரூ.170க்கு மேல் விற்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளதால், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்தி மிகுந்து உள்ளது. ஆனால், கடந்த ஒராண்டாக, தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ நோயின் தாக்குதலால், காய் பிடித்தல் குறைந்து, கொப்பரை தேங்காயின் உற்பத்தி சரிந்து விட்டது. இதன் காரணமாக, கடந்த 8 மாதங்களாக, கொப்பரை தேங்காய் விலைகள் 100 முதல் 170 ரூபாய்வரை விற்கப்பட்டு வருகிறது.