கதவு உடைக்கப்பட்டு ஹோட்டலில் திருட்டு

சிசிடிவி பழுதால் ,ஹோட்டலில் புகுந்து பணம், மொபைல் கொள்ளை;

Update: 2025-03-20 06:52 GMT

ஈரோடு: நாடார்மேட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், பூமா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை, ஹோட்டலின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை காண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து சிவக்குமாருக்கு தகவல் வழங்கினர்.

சிவக்குமார் ஹோட்டலுக்கு வந்து சோதனை செய்தபோது, மேஜை டிராயரில் பூட்டிவைத்திருந்த ₹48,000 பணம் மற்றும் ஒரு மொபைல் போன் காணவில்லை. திருட்டு சம்பவம் குறித்து அவர் புகார் அளித்ததை தொடர்ந்து, சூரம்பட்டி போலீசார் ஹோட்டலில் ஆய்வு நடத்தினர்.

ஹோட்டலுக்குள் சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதும், அவை செயல்படாததால் திருடனை அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News