ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : இன்று 2 -வது நாளாக வேட்புமனுத் தாக்கல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: இன்று 2-வது நாளாக வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.;
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து, 10, 13, 17 என 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யமுடியும் எனும் சூழல் உள்ளது.
முதல் நாள் வேட்புமனுத் தாக்கல் விவரம்
இதில், முதல் நாளான நேற்றுமுன்தினம் (10-ந் தேதி) சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வேட்புமனுத் தாக்கல்
- வேட்புமனுத் தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்
- பொது பிரிவு வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ரூ. 10 ஆயிரமும், எஸ்.சி–எஸ்.டி பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் ரூ. 5 ஆயிரமும் டெபாசிட் தொகையாகச் செலுத்த வேண்டும்
- வேட்புமனுத்தாக்கலின்போது, விதிமுறைகளின்படி வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வேட்பாளர் மற்றும் அவருடன் வருபவர்களுக்கு 3 கார்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், வேட்பாளரின் கார் மட்டும் வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் வரை வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.