ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-09 16:00 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள். 

பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களுக்கு சொந்தமான செல்போன் டவர்கள், கண்ணாடி இழை கேபிள்களை தேசிய பணமாக்கல் திட்டத்தின்படி மத்திய அரசு தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வலியுறுத்தி ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள டெலிபோன் பவன் அலுவலக வளாகத்தில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் குப்புசாமி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாநில துணை செயலாளர் மணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில நிர்வாகி சையது இத்ரிஸ், மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News