திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2021-08-22 07:30 GMT

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நிற்கும் சரக்கு லாரியால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.

தமிழகம் - கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் இந்த திம்பம் மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இன்று காலை குஜராத் மாநிலத்திலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் பொழுது லாரி பழுதாகி நின்றது.

இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கும் செல்லவேண்டிய அனைத்து சரக்கு லாரிகள், வேன்கள் செல்ல முடியாமல் இருபுறமும் வரிசையாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News